×

திமுக கூட்டணிக்கு பூசாரிகள் நலச்சங்கம் ஆதரவு

சென்னை: கோயில் பூசாரிகள் நலச் சங்க மாநில தலைவர் பி.வாசு நேற்று வெளியிட்ட அறிக்கை: சேலத்தை தலைமை இடமாகக் கொண்ட கோயில் பூசாரிகள் நலச்சங்கத்தின் பல்வேறு கோரிக்கைகளை திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்து அதனைப் படிப்படியாக நடைமுறைப்படுத்தி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் கரங்களை மேலும் வலுப்படுத்த பூசாரிகள் அனைவரும் உறுதி பூண்டு உள்ளனர். எனவே இந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்களை, 9 மாவட்டத்தில் உள்ள பூசாரிகளும், அவர்களது குடும்பத்தினரும் ஆதரித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.

Tags : Priests' Union ,DMK , DMK Alliance, Priests' Union, Support
× RELATED திமுக ஒன்றிய செயலாளரை மிரட்டிய மாஜி எம்.எல்.ஏ.,: போலீஸ் கமிஷனரிடம் புகார்