விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி வேண்டுகோள்: தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு தொழிலாளர்கள் வாக்களிக்க வேண்டும்

சென்னை: தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்குமார் வெளியிட்ட அறிக்கை: மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு பொறுப்பேற்று பின், தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளவற்றில் 200க்கும் அதிகமான வாக்குறுதிகளை நிறைவேற்றி சாதனை படைத்துள்ளார். பத்தாண்டு காலம் பாழ்பட்டு முடங்கிக் கிடந்த கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியங்களை புதிய வேகத்தில் செயல்பட வைத்தவர்.

ஆண்டுக்கு 25000 கட்டுமான தொழிலாளர்களுக்கு வீடு வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி கோடிக்கணக்கான அமைப்புசாரா தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்தவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்த ஆட்சியின் திட்டத்தின் பயன்கள் அடித்தட்டு மக்களுக்கு சென்றடைய உள்ளாட்சி பொறுப்புகளில் திமுக தலைமையிலான அணி வெற்றி பெறுவது அவசியம். எனவே இரண்டு கட்டமாக நடைபெற உள்ள இந்த தேர்தலில் திமுக தலைமையிலான அணியின் வேட்பாளர்கள் வெற்றிபெற விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி மற்றும் கட்டுமானத் தொழிலாளர் நிர்வாகிகள், தொழிலாளர்கள் வாக்களிக்க வேண்டும். ஒட்டுமொத்த வாக்காளர்களும் இந்த அணி வெற்றி பெறுவது தான் தங்களுக்கு நன்மை என்பதை கருத்தில் கொண்டு இந்த அணியின் வெற்றிக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More
>