×

பெண் பக்தர்கள் புகார் வீடியோ வைரல் எதிரொலி: திருச்செந்தூர் கோயிலில் விஐபி தரிசன முறை ரத்து

உடன்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அரசு விதித்துள்ள கொரோனா கட்டுப்பாடு வழிகாட்டுதலின் படி திங்கள் முதல் வியாழக்கிழமை வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதிகாலை 5மணி முதல் இரவு 8மணி வரை, 250, 100, 20 ஆகிய கட்டண தரிசனத்திலும், பொதுதரிசனத்திலும் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். 250, 100 ஆகிய கட்டண தரிசனத்தில் செல்லும் பக்தர்கள் சுமார் 5 முதல் 6 மணி நேரம் வரை காத்திருப்பதாக புகார் கூறி வந்தனர். இந்நிலையில் அண்மையில் திருச்செந்தூர் கோயிலுக்கு வந்த பெண்கள், கோயிலில் திருப்திகரமாக தரிசனம் செய்ய முடியவில்லை என குறைகளை சுட்டிக்காட்டி முதல்வர், அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதனையடுத்து இணைஆணையர் மற்றும் உள்துறை அதிகாரிகளை சென்னை வரவழைத்து அறநிலையத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் கடந்த 28ம்தேதி முதல் பக்தர்கள் நேரடி தரிசனத்திற்கு செல்வதற்கு திடீரென தடை விதிக்கப்பட்டனர். சண்முகவிலாச மண்டபத்தில் பக்தர்கள் யாரும் நுழைய முடியாத வகையில் சுற்றி தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டன. இதில் பரிந்துரை கடிதங்கள் மற்றும் விஐபி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 250 வரிசையில் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் நேரடியாக கேட் திறந்து தரிசனத்திற்கு செல்வதற்கு யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. குறிப்பிட்ட நாட்களில் நீதிபதிகள் உள்ளிட்ட விவிஐபிகளுக்கு மட்டுமே நேர் கேட் திறக்கப்பட்டு தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். உபயதாரர்கள், நன்கொடையாளர்கள் ஆகியோர், பக்தர்கள் தரிசனம் செய்துவிட்டு வெளியேறும் பாதையில் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

Tags : Thiruchendur Temple , Female Devotees, Video, Thiruchendur Temple
× RELATED தூத்துக்குடி புதிய பேருந்து...