×

ஊராட்சி தேர்தலில் அனைத்து சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு அறிவிப்புக்கு பின்தான் முகவர் வெளியேற வேண்டும்: ஓபிஎஸ், இபிஎஸ் வேண்டுகோள்

சென்னை:  ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக வெளியிட்ட அறிக்கை:  நாளை முதல்கட்ட உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. முகவர்கள் வாக்குப்பதிவை கண்காணிக்க வேண்டும், அதிமுகவினர், வாக்குப்பதிவு நாளன்று வாக்காளர்கள் அனைவரும் காலை 7 மணி முதலே வாக்குச் சாவடிகளுக்கு சென்று வாக்களிக்குமாறு செய்திட வேண்டும். வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு சேர்க்கும் வரையிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதிமுக சார்பில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கு கட்சி சின்னத்திலும், அதேபோன்று கிராம ஊராட்சித் தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்குப் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு, அவரவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள சின்னங்களிலும் வாக்குகளை அளிக்க வேண்டும்.

மேலும் முகவர்கள் அனைவரும் தங்களுக்கான வாக்கு எண்ணிக்கை மையங்களில் அனைத்து சுற்று வாக்கு எண்ணிக்கையும் நிறைவடைந்து முடிவு அறிவிக்கப்பட்ட பின்னர் தான் அங்கிருந்து வெளியில் வர வேண்டும். போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களுக்கென நியமிக்கப்பட்டுள்ள ஏஜென்ட்களும் தங்களுக்கான வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணும் பணி முறையாக நடைபெறுகின்றனவா என்பதை கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : OBS ,EPS , Panchayat Election, OPS, Request
× RELATED மக்களவை தேர்தலில் ஓபிஎஸ் அணி...