கார்கோவில் 8 ஆயிரம் போதை மாத்திரை பறிமுதல்: விமான நிலையத்தில் பரபரப்பு

சென்னை: சென்னை விமான நிலைய கார்கோ பிரிவில் ஒரேநாளில் 48 லட்சம் மதிப்புள்ள 8 ஆயிரம் போதை மாத்திரைகள், 1.225 கிலோ உயர்ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.  சென்னை பழைய விமானநிலையம் கார்கோ பிரிவில் சென்னையிலிருந்து அமெரிக்காவிற்கு அனுப்ப 2 கொரியர் பார்சல்கள் வந்திருந்தன. அதை டெல்லியை சேர்ந்தவர் பதிவு செய்திருந்தார். அந்த பார்சல்களில் ஊட்டச்சத்து மாத்திரைகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது .டெல்லியை சேர்ந்தவர், சென்னையிலிருந்து பார்சல்களை அனுப்பியதால் சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து சுங்கத்துறையினர் 2 பார்சல்களையும் பிரித்து பார்த்தனர். அதனுள், இந்திய அரசால் தடைசெய்யப்பட்ட போதை மாத்திரைகள்  இருந்ததை கண்டுப்பிடித்தனர். 2 பார்சல்களிலும் மொத்தம் 8 ஆயிரம் போதை மாத்திரைகள் இருந்தன.

இதையடுத்து சுங்கத்துறையினர் போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு ₹40 லட்சம்.  இந்நிலையில் அமெரிக்கா மற்றும் கனடாவிலிருந்து சென்னைக்கு 2 பார்சல்கள் வந்திருந்தன. அவைகளில் யோகா, மசாஜ்க்கு பயன்படுத்தும் பந்துகள் மற்றும் வெஜிடபிள் சாலட்டு மிக்ஸர் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த பார்சல்களையும் சந்தேகத்தில் பிரித்து பார்த்தனா். அதில் பதப்படுத்தப்பட்ட உயர்ரக கஞ்சா இருந்ததை கண்டுப்பிடித்தனர். அந்த 2 பார்சல்களிலும் ஒரு கிலோ 225 கிராம் உயர்ரக கஞ்சா இருந்தது. இதையடுத்து, அந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு 8 லட்சம்.

Related Stories:

More
>