பிரியங்கா கைதை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்: காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

சென்னை : ‘‘பிரியங்கா காந்திக்கு எதிராக நடந்த ஜனநாயகப் படுகொலையை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும்’’ என்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:  வேளாண் சட்டங்களை எதிர்த்து நடந்த போராட்டத்தில் உ.பி. அரசின் காவல்துறையினர் நடத்திய வன்முறை வெறியாட்டத்தை கண்டிக்கிற வகையிலும், இதில் உயிர்நீத்த விவசாயிகள் குடும்பத்தைச் சந்தித்து ஆறுதல் கூறவும் முற்பட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உத்தரபிரதேச எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டு, காவல்துறையினர் காவலில் வைத்துள்ளனர். இத்தகைய காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கையை தமிழக காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது. உ.பி. சம்பவத்தை கண்டித்து இன்று நாடு முழுவதும் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்கள் முன்பாக மாவட்ட காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

Related Stories:

More
>