எச்.ராஜா பேச்சு: தேர்தலில் தனியாக நிற்பதால் நஷ்டம் பாமகவுக்கு தான்

சென்னை: ஊராட்சி மற்றும் உள்ளாட்சி தேர்தல் நாளை மற்றும் 9ம் தேதி இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்நிலையில், தாம்பரம் அடுத்த முடிச்சூர் ஊராட்சி தேர்தலில் போட்டியிடும் பாஜ, அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, பாஜ முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா நேற்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.  

பின்னர் செய்தியாளர்களிடம் எச்.ராஜா கூறுகையில், ‘‘உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிடுவதால், அதிமுக, பாஜ கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இல்லை. இந்த தேர்தலில் அதிமுக, பாஜ கூட்டணி வெற்றிபெறும். பிரிந்து நிற்பதால் பாமகவிற்கு தான் நஷ்டம். எங்கள் கூட்டணிக்கு பலமே மத்தியில் பாஜ ஆட்சி இருப்பதுதான். பிரதமர் மோடியால் தான் நாட்டில் பட்டினி சாவு இல்லாமல் உள்ளது. திருமாவளவனை நம்பியிருந்த பட்டியலின மக்களின் வாக்குகளும் பாஜவுக்குதான் இந்த தேர்தலில் கிடைக்கும்’’ என தெரிவித்தார்.

Related Stories:

More