துணை ஜனாதிபதி வருகையின் போது மேகாலயாவில் வெடிபொருள் கண்டெடுப்பு

ஷில்லாங்:  மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில்  தேசிய மக்கள் கட்சி அலுவலகத்தின் நுழைவு வாயில் அருகே நேற்று பிற்பகல் மர்ம பை ஒன்று கிடந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த கட்சி உறுப்பினர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து உடனடியாக வெடிகுண்டு நிபுணர்களுடன் போலீசார் அங்கு விரைந்தனர். சோதனையில் அலுவலக நுழைவு வாயிலில் கிடந்த மர்ம பையில் சுமார் 2 கிலோ சக்திவாய்ந்த வெடிப்பொருள் இருந்தது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து அதனை உடனடியாக அகற்றிய போலீசார் பாதுகாப்பாக செயலிழக்க செய்தனர். இந்த சம்பவத்துக்கு ஹைனீவ்ரெப் தேசிய விடுதலை கட்சி (எச்என்எல்சி)  பொறுப்பேற்றுக்கொண்டுள்ளது.

ஷில்லாங்கில் நடைபெற இருந்த சாலை திட்ட தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு நேற்று சென்றிருந்த நிலையில் சக்திவாய்ந்த வெடிகுண்டு பறிமுதல் செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories:

More
>