×

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அக்.7 முதல் 15ம் தேதி வரை பிரம்மோற்சவம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம் வரும் 7ம் தேதி தொடங்கி 15ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், பிரமோற்சவத்தையொட்டி நாளை(6ம் தேதி) அங்குரார்ப்பணம் நடத்தப்படுகிறது. தொடர்ந்து, பிரமோற்சவத்தின் முதல் நாளான 7ம் தேதி காலை 9 மணி முதல் 11 மணி வரை  தங்க திருச்சு உற்சவம் நடைபெற உள்ளது. மாலை 5.10 மணி முதல் 5.30 மணி வரை பிரமோற்சவம் கொடியேற்றம் நடைபெறுகிறது. இரவு பெரிய சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி எழுந்தருளி  அருள்பாலிக்கிறார்.

தொடர்ந்து வரும் 8ம் தேதி காலை சின்ன சேஷ வாகனம், இரவு அன்ன வாகனம், 9ம் தேதி காலை சிம்ம வாகனம், இரவு முத்துப்பந்தல் வாகனம், 10ம் தேதி காலை கற்பக விருட்ச வாகனம், இரவு சர்வ பூபால வாகனம், 11ம் தேதி காலை மோகினி அவதாரம், இரவு கருட சேவை, 12ம் தேதி காலை அனுமந்த வாகனம், மாலை தங்க ரதத்திற்கு மாற்றாக சர்வ பூபால வாகனம், இரவு கஜ வாகனம், 13ம் தேதி காலை சூரிய பிரபை வாகனம், இரவு சந்திர பிரபை வாகனம், 14ம் தேதி காலை 8 மணிக்கு தேருக்கு மாற்றாக சர்வ பூபால வாகனத்திலும், இரவு குதிரை வாகனத்தில் சுவாமி எழுந்தருளி அருள்பாலிக்க உள்ளார். பிரமோற்சவத்தின் கடைசி நாளான 15ம் தேதி காலை 6 மணி முதல் 8 வரை பல்லக்கு உற்சவம், காலை 8 மணி முதல் காலை 11 மணிக்கு இடையே திருமஞ்சனம் மற்றும் அயன மண்டபத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடத்தப்படுகிறது. இரவு 8 மணி முதல் 9 மணிக்குள் பிரமோற்சவம்  கொடி இறக்கத்துடன் நிறைவு பெற்று திருச்சு உற்சவம் நடைபெற உள்ளது என்று தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.

* தரிசன டிக்கெட் அவசியம்
பக்தர்கள் பலர் தரிசன டிக்கெட் இன்றி அலிபிரி சோதனை சாவடிக்கு வருகின்றனர். இவர்களை ஊழியர்கள் சோதனை செய்து திருப்பி அனுப்பி வருகின்றனர். பக்தர்கள் தேவஸ்தானத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இன்று ஆழ்வார் திருமஞ்சனம் நடப்பதால் காலை 6 மணி முதல் 11 மணி வரை 5 மணி நேரம் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

Tags : Brahmosham ,Temple of Tirupati Seventh Lilayan , Prom at Tirupati Ezhumalayan Temple from 7th to 15th October
× RELATED திருப்பதி அடுத்த திருச்சானூர்...