×

இன்று முதல் 4 நாள் சதுரகிரி செல்ல தடை

வத்திராயிருப்பு: சதுரகிரி மலைக்கோயிலுக்கு இன்று முதல் 4 நாட்கள் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே சுந்தரமகாலிங்கம் மலைக்கோயில் உள்ளது. அமாவாசை, பவுர்ணமி, ஆகியவற்றிற்கு தலா மூன்று நாட்கள், பிரதோஷத்திற்கு ஒருநாள் என மாதத்திற்கு 8 நாட்கள் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. இக்கோயிலுக்கு விருதுநகர் மாவட்டமின்றி தென் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

கொரோனா பரவல் காரணமாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத்தலங்களுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதியில்லையென தமிழக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. அக். 6ம் தேதி புரட்டாசி அமாவாசை வருகிறது. இந்த நிலையில் இன்று (அக். 4) முதல் 7ம் தேதி வரை பக்தர்கள் சதுரகிரி கோயிலுக்கு செல்ல அனுமதியில்லையென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு நாட்களிலும் பக்தர்களின்றி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகம் நடைபெறுகிறது. புரட்டாசி அமாவாசை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுந்தரமகாலிங்கம் கோயில் பரம்பரை அறங்காவலர் ராஜா (எ) பெரியசாமி, செயல் அலுவலர் விஸ்வநாத் செய்துள்ளனர்.

Tags : Sathuragiri
× RELATED சென்னையின் முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!