×

முக்கிய பிரமுகர்களின் வெளிநாட்டு முதலீடுகளை அம்பலப்படுத்திய பண்டோரா ஆவணங்கள் குறித்து விசாரிக்க ஒன்றிய அரசு உத்தரவு

டெல்லி: முக்கிய பிரமுகர்களின் வெளிநாட்டு முதலீடுகளை அம்பலப்படுத்திய பண்டோரா ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்த ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. பண்டோரா ஆவணங்கள் குறித்து நேரடி வரிகள் வாரியம் மூலம் விசாரணை நடத்த ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. நேரடி வரிகள் வாரியம், அமலாக்க இயக்குனரகம், ஆர்.பி.ஐ ஆகியவற்றின் பிரதிநிதிகள் அடங்கிய குழு விசாரணை நடத்தும். உயர்நிலைக்குழு விசாரணையை நேரடி வரிகள் வாரிய தலைவர் கண்காணிப்பார் என்றும் அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.

Tags : EU ,Pandora , Pandora Documents
× RELATED நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம்...