போதைப்பொருள் வழக்கு: ஷாருக்கான் மகனை விசாரிக்க அனுமதி

மும்பை: போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் ஷாருக்கான் மகன் ஆர்யன்கானை அக்டோபர் 7 வரை விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 7 வரை ஆர்யன்கானை காவலில் விசாரிக்க மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அக்டோபர் 11 வரை ஆர்யன்கான் உட்பட 3 பேரை விசாரிக்க அனுமதி கோரி போதைப்பொருள் தடுப்பு பிரிவு மனு அளித்துள்ளது. சொகுசு கப்பலில் கேளிக்கை விருந்தில் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் பயன்படுத்துவோரிடம் விசாரித்தால்தான் விநியோகம் செய்பவர்களை கண்டுபிடிக்க முடியும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். விருந்து ஒருங்கிணைப்பாளர், கப்பல் உரிமையாளரிடமும் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று ஆர்யன்கான் தரப்பு தெரிவித்துள்ளது.

Related Stories: