சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கைது : விவசாயிகள் மீதான அடக்குமுறை ஹிட்லர் செய்ததை விட கொடுமையானது என தாக்கு!!

லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்தினரை சந்திக்க புறப்பட்ட செய்யப்பட்டார். லக்னோவில் அவரது வீட்டின் முன்பு தொண்டர்கள் குவிந்த நிலையில், அவர் வெளியே செல்ல போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த அகிலேஷ் யாதவ், வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து வாகனத்தில் அழைத்துச் சென்றனர். அப்போது போலீசாருக்கும் சமாஜ்வாதி கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ், விவசாயிகள் மீதான அடக்குமுறை ஆங்கிலேயே ஆட்சியின் போது நடந்ததை விட மிக மோசமாக இருப்பதாக கண்டனம் தெரிவித்துள்ளார். இது ஹிட்லர் செய்ததை விட கொடுமையான தாக்குதல் என்றும் இதற்கு பொறுப்பேற்று ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.இதனிடையே அகிலேஷ் யாதவ் வீட்டின் முன்பு 200 மீட்டர் தூரத்தில் போலீஸ் ஜீப் ஒன்றுக்கு தீவைக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே லக்னோ விமான நிலைய நிர்வாகத்திற்கு உத்தரப் பிரதேச அரசு கடிதம் அனுப்பியுள்ளது. அதில் சட்டிஸ்கர் முதல்வர் புபேஷ் பாகல், பஞ்சாப் துணை முதல்வர் ஆகியோரை விமான நிலையத்தில் அனுமதிக்க கூடாது என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு இருப்பதால் இருவரும் உத்தரப் பிரதேசத்தில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு கூறியுள்ளது.

Related Stories:

More
>