கும்பகோணம் புதிய பேருந்து சாலை அகலப்படுத்தி மின் விளக்குகள் அமைப்பு

கும்பகோணம்: கும்பகோணம் புதிய பேருந்து நிலைய சாலை அகலப்படுத்தி, புதிய மின் விளக்குகளை செயல்பாட்டுக்கு வந்தது. கும்பகோணம் நகராட்சிக்கு உட்பட்ட குறுகிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பயணிகளின் நலன் கருதி முன்னாள் அமைச்சர் கோசி.மணி குறுகிய சாலைகளை எல்லாம் அகலப்படுத்தி அமைத்து கொடுத்தார். கடந்த அதிமுக ஆட்சி காலங்களில் புதிய பேருந்து நிலைய 60 அடி சாலையின் நடுவே மின் கம்பங்கள் அமைக்கப்பட்டது.

இது, போக்குவரத்து பயணிகளுக்கு இடையூராக விபத்துகள் ஏற்பட காரணமாக அமைந்தது. இந்த சாலையில் இடையூராக இருந்த மின் கம்பங்களை முற்றிலும் அகற்றி மீண்டும் சாலையை அகலப்படுத்த வேண்டும் என போக்குவரத்து பயணிகளும், பொதுமக்களும், கோரிக்கை வைத்தனர். அதனைத் தொடர்ந்து, சாலையை அகலப்படுத்தி சாலையின் நடுவே அமைக்கப்பட்ட புதிய மின் விளக்குகளை பயன்பாட்டிற்கு எம்எல்ஏ அன்பழகன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் நகராட்சி பொறியாளர் மணி, உதவி பொறியாளர் சதீஷ் உள்பட அதிகாரிகள், கலந்து கொண்டனர்.

Related Stories:

More