தோகைமலை பகுதியில் மழை: தடுப்பணைகள் நிறைந்து குளங்களுக்கு தண்ணீர் கரை புரண்டு செல்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி

தோகைமலை: தோகைமலை பகுதிகளில் பெய்து வரும் மழையால் தடுப்பணைகள் நிறைந்து பாசன குளங்களுக்கு மழைநீர் செல்வதால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். கரூர் மாவட்டம் தோகைமலை பகுதிகளில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து வெயில் தாக்கம் அதிகமாக இருந்து தற்போது கடந்த சில நாட்களாக தோகைமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் ஆற்றுவாரிகள் அமைக்கப்பட்ட தடுப்பணைகள் நிறைந்து பாசன குளங்களுக்கு மழைநீர் வந்து கொண்டு இருக்கிறது.

இதனால் இந்த ஆண்டு அனைத்து பாசன குளங்களும் நிரம்பும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் எதிர்பார்த்து காத்து உள்ளனர். இதனால் தோகைமலை மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Related Stories:

More