×

தெற்கு கலிபோர்னியா கடலில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் ஏராளமான மீன்கள், பறவைகள் உயிரிழப்பு : சுற்றுசூழல் பேரழிவு என அறிவிப்பு!!

வாஷிங்டன்: அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் உள்ள ஹன்டிங்டன் கடலில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் ஏராளமான மீன்கள் மற்றும் பறவைகள் உயிரிழந்துவிட்டன. இதனை சுற்றுசூழல் பேரழிவு என அம்மாநில ஆளுநர் தெரிவித்துள்ளார்.தெற்கு கலிபோர்னியாவில் உள்ள ஹன்டிங்டன் கடலில் எண்ணெய் எரிகுழாயில் ஏற்பட்ட உடைப்பால் கிட்டத்தட்ட 3000 பீப்பாய் அளவிற்கு எண்ணெய் கசிந்துள்ளது. எண்ணெய் படலமானது பசிபிக் பெருக்கடலில் சுமார் 34 கிமீ தூரத்திற்கு பரவியது. இதையடுத்து ஏராளமான மீன்கள் மற்றும் பறவைகள் உயிரிழந்து கடற்கரையில் ஒதுங்கின.

இது குறித்து தகவல் அறிந்து விரைந்த மீட்புப் படையினர், எண்ணெய் படலம் மேலும் பரவாமல் இருக்கும் வகையில் துரித பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் கடற்கரைக்கு செல்ல பொது மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விமானத்தின் மூலம் எண்ணெய் கசிந்த இடங்களை கண்டறிந்து அதனை தூய்மைபடுத்தும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.இதனிடையே எண்ணெய் கசிவால் ஏற்பட்ட பேரிடர் சுற்றுசூழல் பேரழிவு என ஹன்டிங்டன் மேயர் அறிவித்துள்ளார்.எண்ணெய் கசிவு தொடர்பான காரணம் குறித்து ஆராய்ந்து வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றன.


Tags : southern California , கலிபோர்னியா,சுற்றுசூழல் பேரழிவு
× RELATED சார்ல்ஸ்டன் ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் கோலின்ஸ்