×

லக்கிம்பூர் விவசாயிகள் போராட்ட விவகாரம்: அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யக்கோரி விவசாயிகள் சங்க கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு கடிதம்..!

டெல்லி: ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யக்கோரி விவசாயிகள் சங்க கூட்டமைப்பு குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் கொல்லப்பட்ட விவகாரத்தில் அமைச்சரை பதவி நீக்க வலியுறுத்தியது. உத்திரபிரதேசம் லக்கிம்பூரில் விவசாயிகள் போராட்டத்தில் மத்திய அமைச்சர் மகனின் கார் மோதி 2 விவசாயிகள் உயிரிழந்தனர்.

இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையால் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் பலியாகியுள்ளனர் மேலும் பலர் காயமடைந்தனர். இதற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், உத்திர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு சம்யுக்தா கிசான் மோர்ச்சா கடிதம் எழுதியுள்ளது. அந்த கடித்ததில் நான்கு விவசாயிகள் கொல்லப்பட்டதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும்,மத்திய உள்துறை இணை அமைச்சராக இருக்ககூடிய அஜய் மிஸ்ரா மகன்தான் இந்த பிரச்சனைகளுக்கு காரணம், எனவே அமைச்சர் மற்றும் அவரது மகன் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

மேலும்,உச்சநீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, மத்திய உள்துறை இணை அமைச்சர் பதவியில் இருந்து அஜய் மிஸ்ரா விலக வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபில் வலியுறுத்தியுள்ளார். இதற்கிடையில்,லக்கிம்பூர் வன்முறையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்க காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியாங்கா காந்தி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Lakhimpur ,President of the Federation of Farmers' Associations ,Ajay Misra , Lakhimpur Farmers 'Struggle: Letter to the President of the Federation of Farmers' Associations demanding the removal of Ajay Misra ..!
× RELATED அசாமின் அரசியல் வரலாற்றில் அரசியல்...