×

அமெரிக்காவில் கருக்கலைப்பு செய்ய தடை.. பெண்கள் கொந்தளிப்பு : கருக்கலைப்பு பெண்களின் உரிமை என பேரணி!!

வாஷிங்டன்: அமெரிக்காவில் கருக்கலைப்பு செய்ய தடை விதிக்கும் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏரளாமான பெண்கள் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்காவில் குடியரசு கட்சி ஆளும் 19 மாகாணங்களில் அடுத்தடுத்து கருக்கலைப்புக்கு கட்டுப்பாடுகள் விதிக்கும் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கருவில் இருக்கும் சிசுவுக்கு இதய துடிப்பு கண்டறியப்பட்டால் கருக்கலைப்பு செய்ய தடை விதிக்கும் மசோதா கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்டு சட்டம் ஆக்கப்பட்டுள்ளது. அதன்படி கருவுக்கு 6 வாரம் நிறைந்தால் கருக்கலைப்பு செய்ய தடை விதிக்கப்படுகிறது. அமெரிக்க உச்சநீதிமன்றமும் கருக்கலைப்புக்கு எதிரான தீர்ப்பையே வழங்கி உள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாஷிங்க்டனில் திரண்ட ஆயிரக்கணக்கான பெண்கள், கருக்கலைப்பு என்பது பெண்களின் உரிமை என்று முழக்கங்களுடன் பேரணியாக சென்றனர். இதே போல், டெக்ஸ்சாசிலும் ஆயிரக்கணக்கான பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹூஸ்டன், நியூ யார்க் உள்ளிட்ட இடங்களிலும் கருக்கலைப்பு செய்ய தடை விதிக்கும் மசோதாவிற்கு எதிராக போராட்டம் வலுத்து வருகிறது. அமெரிக்காவின் உச்சநீதிமன்ற வாயிலில் ஏறி என் உடல் என் உரிமை என்றும் பெண்கள் முழக்கமிட்டனர். கருக்கலைப்புக்கு விதிக்கப்பட்ட தடையை ஆதரித்தும் அதனை எதிர்ப்பவர்களை கண்டித்தும் பிளோரிடாவில் ஒரு சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  


Tags : United States , அமெரிக்கா,கருக்கலைப்பு
× RELATED இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான்