×

பாலியல் வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் தாக்கல் செய்த மனு தள்ளுபடி..!!

விழுப்புரம்: பாலியல் வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. கடந்த அதிமுக ஆட்சியில் அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தின் போது பாதுகாப்புக்கு சென்ற இடத்தில் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பெண் ஐ.பி.எஸ். அதிகாரி அப்போதைய சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்டதாக செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி. கண்ணன் ஆகியோர் மீது புகார் அளித்தார். புகாரின் கீழ் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு கடந்த ஒரு வாரமாக விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஏற்கனவே 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து, பாலியல் வழக்குக்கும் தனக்கும் தொடர்பில்லை என்றும், வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரியும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அப்போதைய செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி. கண்ணன் மனுத்தாக்கல் செய்திருந்தார். மேலும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாஸும் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அதில், தன் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டு வரை நடைபெற்றதாக கூறியிருந்ததால் இந்த வழக்கை நடத்துவதற்கு விழுப்புரம் நீதிமன்றத்திற்கு அதிகாரம் கிடையாது என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, பாலியல் வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் தாக்கல் செய்த மனுவை நீதிபதி கோபிநாத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி. கண்ணன் மனுவையும் நீதிபதி தள்ளுபடி செய்தார்.


Tags : DGP ,Rajesh Das , Sex, the former special DGP. Rajeshdas, petition dismissed
× RELATED பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை...