கறம்பக்குடியில் வட கிழக்கு பருவமழை பேரிடர் காலமீட்பு விழிப்புணர்வு செயல் விளக்கம்

கறம்பக்குடி: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுக்கா அலுவலகம் எதிரே தீயணைப்பு துறை சார்பாக வட கிழக்கு பருவ மழையையொட்டி பேரிடர் காலங்களில் இருந்து பொதுமக்களை எப்படி பாதுகாத்து கொள்வது என்றும், குறிப்பாக தீயணைப்பு துறையினர் பொது மக்களை எப்படி பாதுகாப்பது பற்றிய மீட்பு விழிப்புணர்வு செயல் விளக்க பயிற்சி நடைபெற்றது. கறம்பக்குடி தீயணைப்பு நிலைய அலுவர் குழந்தைராசு தலைமையில் தீயணைப்பு வீரர்கள் செயல்முறை பயிற்சி மூலம் பொது மக்கள் முன்னிலையில் செய்து காண்பித்தனர்.

தீயணைப்பு துறை பாதுகாப்பு கருதியின் செயல்பாடு அனைத்து வகைகளையும் செய்து காண்பித்து பேரிடர் காலங்களில் பொது மக்களையும் மற்றும் கால்நடைகளையும் மீட்பது பற்றி செயல் விளக்கம் அளித்தனர். தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த செயல்முறை பயிற்சியில் கறம்பக்குடி தாசில்தார் விஸ்வநாதன், துணை தாசில்தார் ராமசாமி, வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கிராம உதவியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

More
>