புலி ஆட்கொல்லி என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட வில்லை.. 4 பேரை கொன்ற புலியை கொள்வதற்கு எதிராக வழக்கு!!

சென்னை : நீலகிரியில் 4 பேரை கொன்ற புலியை சுட்டுக் கொல்ல உத்தரவிட்டதை எதிர்த்த வழக்கு நாளை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.  நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே தேவன் எஸ்டேட் பகுதியில் MDT23 எனப் பெயரிடப்பட்ட புலி ஒன்று மனிதர்களையும், கால்நடைகளையும் வேட்டையாடி வருகிறது. இதுவரை 30க்கும் மேற்பட்ட கால்நடைகள், 4 மனிதர்களை அந்த புலி கொன்றதாக வனத்துறை தெரிவித்துள்ளது. இதையொட்டி அப்பகுதி மக்கள் தாங்கள் அச்சத்துடன் நாட்களைக் கடத்தி வருவதாகவும், புலியை உடனடியாக பிடிக்கக்கோரியும் தொடர் போராட்டங்களை நடத்தினர்.எனவே ஆட்கொல்லி புலியை சுட்டுப்பிடிக்க தமிழக தலைமை முதன்மை வன உயிரின பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் உத்தரவு பிறப்பித்தார்.

புலியை சுட்டுப் பிடிக்கும் உத்தரவை எதிர்த்து உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டா வைச் சேர்ந்த சங்கீதா தோக்ரா என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை உயர் நீதிமன்றத் தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், புலி ஆட்கொல்லி என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட வில்லை. புலியை சுட்டுப்பிடிப்பது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கும் முன் உரிய சட்டவிதிகளைப் பின்பற்றவில்லை, எனக் குற்றம் சாட்டியுள்ளார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று இன்று தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி அமர்வு முன்பு முறையீடு செய்யப்பட்டது. அப்போது நீதிபதிகள் இந்த வழக்கை நாளை விசாரிப்பதாக தெரிவித்துள்ளனர்.

Related Stories:

More
>