திருப்பத்தூர் மாவட்டத்தில் வீடு வீடாக சென்று போலீசார் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு: எஸ்பி உத்தரவின் பேரில் நடவடிக்கை

திருப்பத்தூர்:  திருப்பத்தூர் மாவட்டத்தில் மெகா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. இதில் 485 வாக்குச்சாவடி மையங்களிலும், 100 நடமாடும் தடுப்பூசி மையம் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்களிடம் போலீசார் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களுக்கு அறிவுரை வழங்கினர். மேலும் தடுப்பூசி குறித்தும் நோயில் இருந்து எப்படி தப்பிக்கலாம் என்று அறிவுரை வழங்கினார். இதுகுறித்து எஸ்பி பாலகிருஷ்ணன் கூறுகையில், மாவட்டத்திலுள்ள அனைத்து துறை போலீசாருக்கும் கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தேன்.

அதனடிப்படையில்  நேற்று மாவட்டம் முழுவதும் சுமார் 200க்கும் மேற்பட்ட போலீசார் திருப்பத்தூர் பஸ் நிலையம், குடியிருப்பு பகுதி, ஓட்டல், கடைகள், பெட்டிக்கடைகள், பேக்கரி கடைகள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் போலீசார் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரடியாக களத்தில் இறங்கி கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும். தடுப்பூசி செலுத்திக் கொண்டால் உயிரை காப்பாற்றிக் கொள்ளலாம். நோய் தொற்று இல்லாமல் நமது மாவட்டத்தை உருவாக்க முடியும். எனவே தடுப்பூசி குறித்த பயம் எதுவும் தேவையில்லை. குறிப்பாக இணை நோயுள்ளவர்கள் இந்த தடுப்பூசி செலுத்திக் கொண்டால் நோய்த்தொற்று வந்தாலும் அதிலிருந்து நாம் உயிர் போகாத அளவிற்கு காப்பாற்றிவிடலாம். எனவே நீங்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமென்று அனைத்து பொதுமக்கள் மற்றும் வணிக வியாபாரிகள், பஸ் நிலையத்தில் உள்ள ஆட்டோ ஓட்டுநர், பஸ் ஓட்டுநர்களிடத்தில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வீடு வீடாக சென்று தடுப்பூசிகள் குறித்து போலீசார் பொதுமக்களுக்கு விளக்கி வருகின்றனர்.

இதில் திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, மாதனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள போலீசாரும் கிராமப்புற பகுதி நகர்ப்புற பகுதிகளுக்கு சென்று பொதுமக்களிடம் தடுப்பூசி குறித்து விளக்கி பொதுமக்களுக்கு போலீசார் மத்தியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார். மேலும் இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், மக்களை காவல் காக்கும் போலீசாரே மக்கள் உயிரையும் காத்து தடுப்பூசி செலுத்தி விடுவது மிகவும் சந்தோஷமாக உள்ளது. எனவே போலீசாருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். இதேபோல் போலீசாரே மக்கள் நலன் காக்க இந்த முயற்சியில் ஈடுபட்டு இருப்பது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Related Stories:

More
>