×

கூடலூர் அருகே 4 பேரை கொன்ற ஆட்கொல்லி புலி சிக்குமா?: 10வது நாளாக வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை..!!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே 4 பேரை கொன்ற புலி மசினகுடி பகுதியில் இருந்து சிங்காரா வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்ததை அடுத்து அப்பகுதியில் வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கூடலூர் தேவன் எஸ்டேட் மற்றும் மசினகுடி பகுதியில் இதுவரை 4 பேரை கொன்று பொதுமக்களை அச்சுறுத்தி வரும் புலியை பிடிப்பதற்காக எடுக்கப்பட்ட வனத்துறையின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளன. 3 டிரோன் கேமராக்கள், 40க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை வைத்தும் இதுவரை புலி சிக்கவில்லை.

தொடர்ந்து போக்குக்காட்டி வரும் அந்த புலியை பிடிக்க இன்று 10வது நாளாக தமிழக - கேரள வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மசினகுடி பகுதியில் இருந்து அந்த புலி சிங்காரா வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது. சிங்காரா மின் நிலையம் அருகே நீண்ட நேரம் புலி சுற்றி திரிந்ததாக உள்ளூர் வாகன ஓட்டுநர் அளித்த தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் தேடும் பணி முடிக்கிவிடப்பட்டுள்ளது. புலியை பிடிப்பதற்காக 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.

ஒரு கால்நடை மருத்துவர் மற்றும் வனத்துறை ஊழியர்கள் யானை மீது அமர்ந்தவாறு தேடுதலில் ஈடுபட்டுள்ளனர். பல நாட்களாக இடமாற்றி அலைந்து திரிந்து வரும் புலி மிகவும் சோர்வுடன் காணப்படுவதால் விரைவில் சிக்கும் என்று வனத்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். புலியை மயக்க ஊசி செலுத்தி உயிருடன் பிடிப்பதற்காக கால்நடை மருத்துவர்களோடு வனத்துறையினரும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.


Tags : Atkoli Tiger Sikkai ,Gouldalur , Cuddalore, Tiger, Forest, Search Hunting
× RELATED கடலூர் அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை...