×

நாளை மறுநாள் மகாளய அமாவாசை!: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் புனித நீராட இன்றே குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்..!!

ராமநாதபுரம்: மகாளய அமாவாசையை ஒட்டி நாளை மற்றும் நாளை மறுநாள் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடவும், சுவாமி தரிசனம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இன்றே குவிந்துள்ளனர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அமாவாசை நாட்களில் ஆயிரக்கணக்கானோர் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து அங்குள்ள 22 புனித நீர்த்தங்களில் நீராடிய பின்னர் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாளையும், மகாளய அமாவாசை நாளான 6ம் தேதியும் பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் நீராடவும், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவும், சுவாமி தரிசனம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் இன்றே குவிந்தனர். கடந்த மாதம் 21ம் தேதி தொடங்கிய மகாளய எச்சம் வரும் 6ம் தேதி வரை நீடிப்பதால் அமாவாசை நாளன்று திதி, தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் இன்றே கடலில் புனித நீராடிவிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். பின்னர் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.


Tags : Rameswaram Ramanadeswamy Temple , Rameswaram Ramanathaswamy Temple, Holy Bathing, Devotees
× RELATED இரு சக்கர வாகனத்தில் சென்றபோது...