×

புரட்டாசி மாதத்திலும் காசிமேடு மார்க்கெட்டில் மீன்கள் விலை திடீர் அதிகரிப்பு

சென்னை: காசிமேடு மீன் விற்பனை கூடத்தில், வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மொத்த வியாபாரிகளும், பொதுமக்களும் மீன் வாங்குவதற்காக அதிகளவில் கூடுவார்கள். வழக்கமாக புரட்டாசி மாதம் பலர் அசைவ உணவை தவிப்பார்கள் என்பதால், மீன் விற்பனை கூடம் கூட்டமின்றி காணப்படும். ஆனால், கடந்த 2 வாரங்களாக எதிர்பார்த்ததை விட கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது.  அதன்படி, ஞாயிற்றுக்கிழமையான நேற்றும் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

இதனால், வஞ்சிரம் ஒரு கிலோ 600 ரூபாய்க்கும், சீலா ஒரு கிலோ 420 ரூபாய்க்கும், இறால் ஒரு கிலோ 300 ரூபாய்க்கும், நண்டு ஒரு கிலோ 200 ரூபாய்க்கும், பால் சுறா ஒரு கிலோ 270 ரூபாய்க்கும், கருப்பு வவ்வால் ஒரு கிலோ 420 ரூபாய்க்கும், வெள்ளை வவ்வால் ஒரு கிலோ 310 ரூபாய்க்கும், சங்கரா ஒரு கிலோ 300 ரூபாய்க்கும், தும்பிலி ஒரு கிலோ 120 ரூபாய்க்கும், வெள்ளை கிழங்கான் ஒரு கிலோ 320 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து அகில இந்திய மீனவர் சங்க செய்தி தொடர்பாளர் நாஞ்சில் ரவி கூறியதாவது: டீசல் விலை உயர்வு காரணமாக பெரும்பாலான விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்வதில்லை. மேலும், வரத்து குறைவால் மீன்கள் விலை அதிகரித்து காணப்பட்டது.


Tags : Coimbatore , Purattasi, Kasimedu, Market, Fish
× RELATED கோவை மாநகராட்சி நீச்சல் குளத்தில் குவியும் சிறுவர்கள்