கிழக்கு கடற்கரை சாலையில் டிஜிபி சைலேந்திரபாபு சைக்கிள் பயிற்சி

சென்னை: தமிழக காவல் துறை தலைவர் சைலேந்திரபாபு தனது நண்பர்களுடன் வாரத்தில் ஒரு நாள் ஏதாவது ஒரு பகுதிக்கு சைக்கிள் பயிற்சி மேற்கொள்வார். அப்போது, அருகில் உள்ள காவல் நிலையத்தை ஆய்வு செய்வார். அதேபோல, நேற்று காலை சென்னையில் இருந்து நண்பர்களுடன் சைக்கிளில் புறப்பட்டார். அவர், கிண்டி, வண்டலூர் வழியாக செங்கல்பட்டுக்கு வந்தார். அப்போது, செங்கல்பட்டு காவல் நிலையம் சென்று வழக்கு பதிவேடுகள், அடிப்படை வசதிகள் குறித்து திடீர் ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து, செங்கல்பட்டில் இருந்து சைக்கிளில் புறப்பட்ட அவர் இசிஆர் சாலை வழியாக ஸ்ரீசென்னைக்கு புறப்பட்டார்.

Related Stories:

More
>