கோயில்களில் மொட்டை போடும் ஊழியர்களுக்கு ரூ.5,000 மாத ஊக்க தொகை வழங்கும் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்

சென்னை:  கோயில்களில் மொட்டை போடும் ஊழியர்களுக்கு மாதத்துக்கு ரூ.5,000 வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.  இந்தத் திட்டத்தை தொடங்குவதற்கு அடையாளமாக 250 பேருக்கு மாத ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இதுகுறித்து அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘மொட்டை போடும் ஊழியர்களுக்கு மாத ஊக்கத்தொகை வழங்கும் திட்ட விழாவில் கலந்து கொள்ள 250 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கோயில் பணியாளர்களுக்கு வழங்கப்பட உள்ள ஊக்கத்தொகை அந்தந்த கோயில் நிர்வாகம் சார்பில் எடுத்து வந்து பொறுப்பாளரிடம் ரொக்கமாக வழங்க வேண்டும். பயனாளிகள் ஆதார் அட்டையுடன் வர வேண்டும். இதற்காக பொறுப்பு அலுவலர் இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி, உதவி ஆணையர் ஜோதி லட்சுமி, செயல் அலுவலர்கள் சீதாராமன் ஜெயராமன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>