×

கோயில்களில் பயன்படுத்தாத தங்க நகைகள் எவ்வளவு?..அறிக்கை கேட்கிறார் கமிஷனர் குமரகுருபரன்

சென்னை: தமிழக அறநிலையத்துறைஆணையர் குமரகுருபரன்  மண்டல இணை ஆணையர்களுக்கு எழுதியுள்ள கடிதம்: ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டு சுவாதீனம் பெறப்பட்ட நிலம், மனை, கட்டிடம் விவரங்கள், ஆக்கிரமிப்பு விவரங்கள், கூட்டு ஆக்கிரமிப்பு தாரரரை வாடகைதாரர்களாக முறைப்படுத்துதல் விவரம்,  கோயிலுக்கு சொந்தமான நிலங்களை கம்பி வேலியிட்டு பாதுகாத்தல், கோயில் சொத்துக்கள் காலியிட விவரங்கள், கணினி சிட்டாவில் தனிநபர் பெயரில் பட்டா மாற்றம் செய்யப்பட்ட கோயில் நிலங்களின் விவரம், வசூல் நிலுவை, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட கற்சிலை விவரங்கள், கோயில்களில் நடைபெற்ற களவு தொடர்பான விவரம், சிலை பாதுகாப்பு குறித்து நிறுவப்பட்ட சிசிடிவி, அலாரம் அமைக்கப்பட்ட விவரங்கள், சிலை கடத்தல் தடுப்பு பிரிவால் கண்டுபிடிக்கப்பட்டு கோயில் வசம் மீட்கப்பட்டுள்ள சிலைகள் விவரம்,

கோயில் காலிபணியிடங்கள் நிரப்புதல் குறித்த விவரம்,  நகைகள், விலை உயர்ந்தவைகளை கடந்த ஜனவரி 2021 முதல் செப்டம்பர் 2021 வரை முடிய முன்னேற்ற அறிக்கை விவரம், கோயில் நகை மற்றும் விலை உயர்ந்தவைகள் மதிப்பீடு செய்யப்பட்ட விவரம், தணிக்கை தடைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரம், இணை ஆணையர், நீதிமன்ற வழக்குகள் விவரங்கள், குடமுழுக்கு தொடர்பான திருப்பணிக்கு அனுமதி வழங்கப்பட்ட கோயில்கள், புதிய நந்தவனம் அமையவள்ள கோயில்கள், திருக்குளங்களை சீரமைத்தல், முதுநிலை மற்றும் முதுநிலை அல்லாத கோயில்கள் பல மாற்று வெள்ளி இனங்கள், பல மாற்று தங்க இனங்கள் விவரங்களை இணை ஆணையர், உதவி ஆணையர்கள் கோயில் நிர்வாகிகளிடமும், ஆய்வர்களிடம் பெற்று அறிக்கையாக சமர்பிக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

Tags : Commissioner ,Kumarakuruparan , Temple, Gold Jewelry, Report, Commissioner Kumarakuruparan
× RELATED மதுரை உதவி ஆணையருக்கு விதித்த அபராதம் ரத்து..!!