×

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு பஸ்களில் முன்பதிவு தொடங்கியது

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு பஸ்களில் முன்பதிவு இன்று அதிகாலை முதல் தொடங்கியது. இதையடுத்து ஏராளமானோர் முன்பதிவு செய்து வருகின்றனர்.  தீபாவளி பண்டிகை நவம்பர் 4ம் தேதி வருகிறது. அதற்கு அடுத்த நாள் வெள்ளிக்கிழமை பெரும்பாலனோருக்கு விடுமுறையாக இருக்கும். பிறகு சனி, ஞாயிறு என மொத்தம் 4 நாட்கள் தொடர்ந்து விடுமுறை உள்ளது. அரசு விரைவு பஸ்களில் 30 நாட்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்துகொள்ளும் வசதி இருக்கிறது.  அதாவது www.tnstc.in மற்றும் டிஎன்எஸ்சிடி செயலி போன்றவற்றை பயன்படுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். இதேபோல் தனியார் முன்பதிவு வலைதளங்கள் மற்றும் செல்போன் செயலிகள் மூலமும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.   

தற்போது இதற்கான முன்பதிவு தொடங்கியிருக்கிறது. அரசின் போக்குவரத்துத்துறை சார்பில் தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்கு செல்வோரின் வசதிக்காக வழக்கம் போல் பண்டிகைக்கு முன்பும், பிறகும் சிறப்புப் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. கடந்த ஆண்டு வழக்கமாக இயக்கப்படும் பஸ்களை விட கூடுதலாக சுமார் 4 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டும் அதேபோல் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். இதற்காக சிறப்பு பேருந்து நிலையங்கள் அமைத்தல், சிறப்புப் பேருந்துகள் இயக்கம் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.


Tags : Deepavali festival , Deepavali, Festival, Government Bus, Booking
× RELATED தீபாவளி பண்டிகையையொட்டி அரசு விதிகளை...