×

நைட் ரைடர்ஸ் அபார வெற்றி

துபாய்: ஐதராபாத் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், நைட் ரைடர்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. துபாயில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஐதராபாத் முதலில் பேட் செய்தது. ராய், சாஹா இருவரும் இன்னிங்சை தொடங்கினர். சாஹா சந்தித்த முதல் பந்திலேயே விக்கெட்டை பறிகொடுக்க, ஐதராபாத் அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. ராய் 10 ரன் எடுத்து மாவி பந்துவீச்சில் சவுத்தீ வசம் பிடிபட்டார். கேப்டன் வில்லியம்சன் 26 ரன் எடுத்து (21 பந்து, 4 பவுண்டரி) ரன் அவுட்டானது ஐதராபாத் அணிக்கு மேலும் பின்னடைவை கொடுத்தது. அபிஷேக் 6 ரன், ஓரளவு தாக்குப்பிடித்த பிரியம் கார்க் 21 ரன் எடுக்க, ஹோல்டர் 2 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

கடைசி கட்டத்தில் அப்துல் சமத் 25 ரன் (18 பந்து, 3 சிக்சர்) விளாசி வெளியேறினார். ரஷித் கான் 8 ரன் எடுத்து ஷிவம் மாவி பந்துவீச்சில் வெங்கடேஷ் வசம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஐதராபாத் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 115 ரன் எடுத்தது. புவனேஷ்வர், கவுல் தலா 7 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கொல்கத்தா பந்துவீச்சில் சவுத்தீ, மாவி, வருண் தலா 2 விக்கெட், ஷாகிப் ஹசன் 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 19.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 119 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. சுப்மன் கில் அதிகபட்சமாக 57 ரன் (51 பந்து, 10 பவுண்டரி) விளாசினார். நிதிஷ் ரானா 25 ரன், தினேஷ் கார்த்திக்18 ரன் (அவுட் இல்லை) எடுத்தனர். ஐதராபாத் பந்துவீச்சில் ஹோல்டர் 2 விக்கெட், ரஷீத்கான், கவுல் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

Tags : Knight Riders , The Knight Riders were a huge success
× RELATED நைட் ரைடர்சை வீழ்த்தியது சிஎஸ்கே: ஜடேஜா அபார பந்துவீச்சு