×

சிகாகோ ஓபன் டென்னிஸ்: இறுதி போட்டியில் முகுருசா - ஜெபர் மோதல்

சிகாகோ: அமெரிக்காவில் நடைபெறும் சிகாகோ ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், ஸ்பெயின் வீராங்கனை கார்பினி முகுருசா - துனிசியாவின் ஆன்ஸ் ஜெபர் மோதுகின்றனர். அரையிறுதியில் முகுருசாவுடன் மோத இருந்த மார்கெதா வொண்ட்ருசோவா (செக்.) காயம் காரணமாக விலகியதை அடுத்து, முகுருசா பைனலுக்கு முன்னேறினார். மற்றொரு அரையிறுதியில் எலனா ரைபாகினாவுடன் (கஜகஸ்தான்) மோதிய  ஆன்ஸ் ஜெபர் 6-4, 3-2 என்ற கணக்கில் முன்னிலை வகித்தபோது, காயம் காரணமாக ரைபாகினா விலகினார். இதையடுத்து, சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் பைனலில் முகுருசா - ஜெபர் மோதுகின்றனர்.


Tags : Chicago Open Tennis ,Muguruza ,Jeffer , Chicago Open Tennis: Muguruza-Jeffer clash in the final
× RELATED அரையிறுதியில் முகுருசா: டபுள்யுடிஏ மகளிர் பைனல்ஸ்