மறைந்த திமுக தேர்தல் பணிக்குழு செயலாளர் வீரபாண்டி ராஜா உடல் அடக்கம்

சேலம்: மறைந்த திமுக தேர்தல் பணிக்குழு செயலாளர் வீரபாண்டி ராஜாவின் உடல் நேற்று, ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது. சேலத்தை சேர்ந்த மறைந்த முன்னாள் வேளாண்மை துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் இளைய மகனும், திமுக தேர்தல் பணிக்குழு செயலாளருமான வீரபாண்டி ராஜா(57), நேற்று முன்தினம் தனது பிறந்த நாளில், மாரடைப்பால் காலமானார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், எ.வ.வேலு, சாமிநாதன், பழனிவேல் தியாகராஜன், காந்தி, மகேஷ் பொய்யாமொழி, மூர்த்தி, மதிவேந்தன், துணை சபாநாயகர் பிச்சாண்டி, கனிமொழி எம்.பி. மற்றும் பல்வேறு கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து, வீரபாண்டி ராஜாவின் உடல் நேற்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, வீரபாண்டி ஆறுமுகம் நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டது.

Related Stories:

More
>