சர்ச்சையில் விழுப்புரம் பாஜக தலைவர் அண்ணாமலை என்ன பெரிய கடவுளா? நான்தான் பாஜகவில் பெரிய ஆளு: சமூக வலைதளத்தில் ஆடியோ வைரல்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவர் கலிவரதனிடம், அக்கட்சியை சேர்ந்த நிர்வாகி ஒருவர் மாற்றுக்கட்சியில் இருந்து 20 பேரும், பாமகவிலிருந்து 50க்கும் மேற்பட்டவர்களும் கட்சியில் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் இணைவதற்கு விரும்புவதாக கூறியுள்ளார். அதற்கு பதில் அளித்து கலிவரதன் பேசும் ஆடியோ தற்போது வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் அவர், அண்ணாமலையும் வரமாட்டாரு, திருவண்ணாமலையும் வராது உனக்கு. அண்ணாமலை என்ன கடவுளா?. நான் கடவுளா... அவர் கடவுளா?. பின்ன என்ன அண்ணாமலையை கூப்பிட்டுவா?. திருவண்ணாமலையை கூப்பிட்டுவான்னு உட்க்காந்துட்டு இருக்கீங்க. என் தலைமையில் கட்சியில் சேர சொல்லுங்க. என்னைவிட பெரிய ஆளு வேற யாரும் இல்ல கட்சியில. நா வருவேன், மீனாட்சி வருவாங்க கட்சியில. இவ்வாறு அவர் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவர் கலிவரதன் மீது ஏற்கனவே பெண் நிர்வாகி ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளதும், கட்சி பதவி வாங்கித் தருவதாக கூறி ரூ. 10 லட்சம் மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories: