உத்தரப்பிரதேசத்தில் உச்சகட்ட பதற்றம்; போலீசார் துப்பாக்கிச்சூட்டில் 4 விவசாயிகள் உள்பட 8 பேர் பலி: ராகுல், அகிலேஷ் யாதவ், மம்தா கடும் கண்டனம்

லக்னோ: உத்தரப்பிரதேசம் முழுவதும் விவசாயிகள் கிளர்ந்து எழுந்து போராட்டம் நடத்துவதால் உச்சகட்ட பதற்றம் நிலவி வருகிறது. உத்தரப்பிரதேசத்தில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் கூட்டத்துக்கு நடுவே ஒன்றிய அமைச்சரின் மகன் கார் மோதி 2 பேர் உயிரிழந்தனர். போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் கூட்டத்தில் ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஷ்ராவின் மகன் கார் புகுந்தது. லக்கிம்பூர் கெர்ரி என்ற இடத்தில் உ.பி. துணை முதலமைச்சர் பங்கேற்கும் விழா நடைபெறும் இடம் அருகே போராட்டம் நடந்தது.

விழாவிற்கு வருகை தந்த பாஜக தலைவர்களுக்கு கருப்புக்கொடி காட்டியதால் விவசாயிகள் மீது காரை ஏற்றியதாக புகார் எழுந்துள்ளது. கூட்டத்துக்குள் புகுந்து 2 காரில் இருந்தவர்களை கீழே இறக்கி விட்டு காரை விவசாயிகள் தீயிட்டு கொளுத்தினர். 2 விவசாயிகள் காரி ஏற்றி கொல்லப்பட்டதாக கூறி போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்தினர். வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடைபெறும் போராட்டத்தின் ஒரு பகுதியாக பல்வேறு மாநிலங்களில் விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சம்பவ இடத்திற்கு கூடுதல் டி.ஜி.பி., பிரசாந்த் குமாரை அனுப்பினார்.

முன்னாள் முதல்வர்  அகிலேஷ் யாதவ், அமைதியாக போராடிய விவசாயிகளை நசுக்கும் மத்திய உள்துறை மந்திரியின் இச்செயல் மனிதாபிமானமற்றது, கொடூரமானது. என கூறியுள்ளார். இந்நிலையில் உத்தர பிரதேசம் லக்கிம்பூர் பகுதியில் விவசாயிகள் போரட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 8 பேர் உயிரிழந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து உத்தரப்பிரதேசம் முழுவதும் விவசாயிகள் கிளர்ந்து எழுந்து போராட்டம் நடத்துவதால் உச்சகட்ட பதற்றம் நிலவி வருகிறது.

மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா விளக்கம்

லக்கிம்பூரில் வன்முறை சம்பவத்தின் போது தனது மகன் இல்லை, வீடியோ ஆதாரம் உள்ளது என அமைச்சர் அஜய் மிஸ்ரா தெரிவித்துள்ளார். மேலும் விவசாயிகள் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் பாஜகவை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர் எனவும் கூறினார்.

மம்தா கண்டனம்

லக்கிம்பூரில் நடைபெற்ற வன்முறை சம்பவத்திற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கு திரிணாமுல் காங்கிரசின் ஆதரவு எப்போதும் இருக்கும் எனவும் உறுதி அளித்துள்ளார்.

பிரியங்கா காந்தி உ.பி. விரைவு

உ.பி.யில் வன்முறை நிகழ்ந்த நிலையில் நாளை லக்கிம்பூர் செல்கிறார் காங்கிரசின் பிரியங்கா காந்தி.

Related Stories:

More
>