பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீதான பாலியல் வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்.!

சென்னை: பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீதான பாலியல் வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை கே.கே. நகரில் இயங்கிவரும் பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன், ஆன்லைன் வகுப்புகளின்போது மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தது, முறையற்ற செய்திகளை அனுப்புதல்,அரை நிர்வாணமாக ஆன்லைன் வகுப்புகளுக்கு வருதல் மற்றும் மாணவர்களிடம் அநாகரீகமான கருத்துகளை தெரிவித்தல் போன்ற புகார்களின் அடிப்படையில் கடந்த ஜூன் மாதம் 24 ஆம் தேதி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து,அவர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது.

அதன்பின்னர்,சென்னை சிறப்பு போக்சோ நீதிமன்றம் ராஜகோபாலனுக்கு ஜாமீன் வழங்க மறுத்தது.இதனையடுத்து,ஆசிரியர் மீதான பாலியல் புகார் தொடர்பாக அசோக் நகர் அனைத்து மகளிர் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இந்த நிலையில்,சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீதான பாலியல் வழக்கில்,அசோக் நகர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். முன்னாள் மற்றும் மற்றும் தற்போதைய மாணவர்கள் உள்ளிட்ட 7 பேர் அளித்த புகாரின் அடிப்படையில்,வாக்குமூலம் பெறப்பட்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: