பவானிபூர் இடைத்தேர்தலில் 58,832 வாக்குகள் வித்தியாசத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெற்றி: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து.!

பவானிபூர்: பவானிபூர் இடைத்தேர்தலில் 58,832 வாக்குகள் வித்தியாசத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெற்றி பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் பிரியங்கா திப்ரிவாலை விட 56,388 வாக்குகள் அதிகம் பெற்று மம்தா பானர்ஜி வெற்றி பெற்றுள்ளார்.பவானிபூர் இடைதேர்தலில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 84,709 வாக்குகளும்,அவரை எதிர்த்து போட்டியிட்ட பிரியங்கா திப்ரேவால் 26320 வாக்குகளும் பெற்றுள்ளனர்.இதனால்,மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெற்றி பெற்றுள்ளார்.

அவர் தன்னை எதித்து போட்டியிட்ட பிரியங்கா திப்ரேவாலை விட 58,832 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.இதனால்,அவரது முதல்வர் பதவியை மேலும்,நான்கரை ஆண்டுகள் தொடருவார்.இந்த வெற்றியை அவரது ஆதரவாளர்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். மேலும்,இந்த வெற்றி குறித்து,மம்தா கூறுகையில்:”நான் பவானிபூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் 58,832 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொகுதியின் ஒவ்வொரு வார்டிலும் வெற்றியை பதிவு செய்துள்ளேன்”,என்று கூறியுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

மேற்குவங்க பவானிபூர் இடைத்தேர்தலில் வெற்றிப்பெற்ற மம்தா பானர்ஜிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேற்குவங்க மக்கள் மம்தா பானர்ஜி மீது வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை அவரது வெற்றி உறுதி செய்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>