துபாயில் இரவு 7.30க்கு பலப்பரீட்சை ; கேகேஆரின் பிளேஆப் வாய்ப்பு கனவை தகர்க்குமா ஐதராபாத்?.. பிற்பகல் 3.30 மணிக்கு ஆர்சிபி-பஞ்சாப் கிங்ஸ் மோதல்

சார்ஜா: ஐபிஎல் தொடரில் இன்று 2 போட்டி நடக்கிறது. மாலை 3.30 மணிக்கு சார்ஜாவில் பெங்களூரு-பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. பெங்களூரு 11 போட்டிகளில் 7ல் வெற்றியுடன் 3வது இடத்தில் உள்ளது. இன்று வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்று வாய்ப்பை 3வது அணியாக உறுதி செய்யும். மறுபுறம் பஞ்சாப் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற நெருக்கடியான நிலையில் களம் காண்கிறது. இரு அணிகளும் இதுவரை 27 போட்டிகளில் மோதி உள்ளன.

இதில் பெங்களூரு 12, பஞ்சாப் 15ல் வென்றுள்ளன. நடப்பு சீசனில் கடந்த ஏப்.30ம்தேதி மோதிய போட்டியில் பஞ்சாப் 34 ரன் வித்தியாசத்தில் வென்றுள்ளது. தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு துபாயில் நடக்கும் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. 12 போட்டியில் 5ல் வெற்றியுடன் 4வது இடத்தில் உள்ள கொல்கத்தா பிளேஆப் வாய்ப்பில் நீடிக்க கட்டாயம் வெற்றிபெற வேண்டும். தோல்வி அடைந்தால் வெளியேற வேண்டியதுதான்.

மறுபுறம் சன்ரைசர்ஸ் ஏற்கனவே பிளேஆப் சுற்று வாய்ப்பை இழந்துவிட்ட நிலையில் மீதமுள்ள 3 போட்டிகளையும் வெற்றிகரமாக முடிக்கும் எண்ணத்தில் களம் காண்கிறது. இரு அணிகளும் இதுவரை 20 போட்டிகளில் மோதி உள்ளன. இதில் ஐதராபாத் 7, கொல்கத்தா 13ல் வென்றுள்ளன. நடப்பு சீசனில் ஏப்.11ம் தேதி மோதிய போட்டியில் கேகேஆர் 10 ரன் வித்தியாசத்தில் வென்றுள்ளது.

Related Stories: