×

ரஷியாவில் இருந்து பாட்டியின் இறுதி சடங்கிற்கு வந்த மருத்துவக்கல்லூரி மாணவி மாயம்

கோவை: கோவை விளாங்குறிச்சி  கொங்குமாநகரை சேர்ந்தவரின் 18 வயது மகள் ரஷ்யாவில் மருத்துவக்கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். சமீபத்தில் கோவையில் வசித்த அவரது பாட்டி இறந்துவிட்டார். அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக மாணவி ரஷ்யாவில் இருந்து கோவை திரும்பினார். இறுதி சடங்கு முடிந்தவுடன் ரஷ்யா திரும்புவதற்காக காத்திருந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை வீட்டில் இருந்த மாணவியை திடீரென மாயமானார். அக்கம்பக்கத்தில் விசாரித்தும், உறவினர் வீடுகளில் கேட்டும் அவர் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து பீளமேடு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரித்தனர். மேலும் அவரது வீட்டு முன்பு இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் வெள்ளை நிற காரில் மாணவி செல்வது தெரியவந்தது. தொடர்ந்து அவர் எங்கு சென்றார்? என்பது குறித்து போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

Tags : Russia , Russia, medical college student, magic
× RELATED ரஷ்ய மின்நிலையங்கள் மீது உக்ரைன்...