×

பவானிபூர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை; 2,800 வாக்குகள் வித்தியாசத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி முன்னிலை.!

பவானிபூர்: பவானிபூர் இடைத்தேர்தலில் மேற்கு வங்க முதல்வர் மம்தா 2800 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். முன்னதாக நடைபெற்ற மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.ஆனால்,நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானா்ஜி தோல்வியுற்றாா். இருப்பினும், மேற்கு வங்க முதல்வராக அவா் பதவியேற்றாா். இதனால்,பதவியேற்ற 6 மாதங்களுக்குள் அவா் எம்எல்ஏவாக தோ்ந்தெடுக்கப்பட வேண்டும்.

இதற்கிடையில்,பவானிபூர் தொகுதி திரிணாமுல் எம்.எல்.ஏ., சோபன்தே தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து, பவானிபூர் தொகுதிக்கு இடைதேர்தல் அறிவிக்கப்பட்டு, அத்தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிட்டாா். அவரை எதிா்த்து பாஜக சாா்பில் பிரியங்கா டிப்ரிவால் வேட்பாளராக களம் இறங்கினார். அதன்படிகடந்த செப்.30 ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.இதனைத் தொடர்ந்து,வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

மொத்தம் 21 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இரண்டாவது சுற்று முடிவுகளின்படி மம்தா பானர்ஜி 4,250 வாகுகள் பெற்றுள்ளார். பவானிபூர் இடைத்தேர்தலில் மேற்கு வங்க முதல்வர் மம்தா 2,800 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பிரியங்கா டிப்ரிவால் 1,450 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.

Tags : Bavanibur ,CM ,Mamta Banerji , Bhavanipur by-election vote count; Chief Minister Mamata Banerjee leads by 2,800 votes!
× RELATED குமரி மாவட்டத்தில் கடந்த 24 மணி...