×

மேற்குவங்கத்தில் மீண்டும் முதல்வராக மம்தா பானர்ஜி?: பவானிபூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது..!

கொல்கத்தா: மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிட்ட பவானிபூர் தொகுதி வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மேற்கு வங்காள சட்டப்பேரவை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றாலும், அக்கட்சி தலைவர் மம்தா பானர்ஜி, நந்திகிராம் தொகுதியில் சுவேந்து அதிகாரியிடம் தோல்வியடைந்தார். என்றாலும் முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். பதவி ஏற்றதில் இருந்து 6 மாதத்திற்குள் சட்டசபை உறுப்பினராக வேண்டும்.

இதனையடுத்து,பவானிபூர் தொகுதி திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் பவானிபூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் மம்தா பானர்ஜி போட்டியிட்டார். பவானிபூர் தொகுதியுடன் சாம்செர்கஞ்ச், ஜாங்கிபூர் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.

மேலும் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் பவானிபூர் தொகுதியில் மம்தா பானர்ஜி, பாஜகவின் சார்பில் பிரியங்கா டிப்ரேவால் ஆகியோர் போட்டியிட்டுள்ளனர். செப்டம்பர் 30ம் தேதி பவானிபூர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 57% வாக்குகள் மட்டுமே பதிவானது. தேர்தலில் பதிவான ஓட்டுகள் 21 சுற்றுக்களாக எண்ணப்பட உள்ளன. இன்று மாலைக்குள் முடிவு தெரிந்துவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Mamta Banerjee ,West West ,Bavanipur , West Bengal, Mamta Banerjee, Bhavanipur constituency
× RELATED பாஜவில் சேராவிட்டால் கைது செய்வோம்...