ராஜஸ்தான் அணி அபார வெற்றி : சதம் விளாசினார் ருதுராஜ்

அபுதாபி:ஷேக் சையத் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசியது. சென்னை தொடக்க வீரர்களாக ருதுராஜ், டு பிளெஸ்ஸி களமிறங்கினர். சிஎஸ்கே 8.3  ஓவரில் 57 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து திணறிய நிலையில், ருதுராஜ் -  மொயீன் இணைந்து 57 ரன் சேர்த்தனர். திவாதியா பந்துவீச்சில் மொயீன் அவுட் ஆனார். அடுத்து வந்த ஜடேஜா அதிரடியில் இறங்க சிஎஸ்கே ஸ்கோர் எகிறியது. கடைசி பந்தை சிக்சருக்கு தூக்கிய ருதுராஜ் சதம் அடித்து அசத்தினார். சென்னை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 189 ரன் குவித்தது.

ருதுராஜ் 101 ரன் (60  பந்து, 9 பவுண்டரி, 5 சிக்சர்), ஜடேஜா 32 ரன்னுடன் (15 பந்து, 4 பவுண்டரி, 1  சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதையடுத்து, 20 ஓவரில் 190 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ராஜஸ்தான் களமிறங்கியது. இந்நிலையில் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் - லெவிஸ் களமிறங்கினர். இவர்கள் சிஎஸ்கே பந்து வீச்சை சிதறடித்தனர். இந்நிலையில், சர்துல் தாகூரின், பந்தில் லெவிஸ் 27 ரன் (12 பந்து, 2 சிக்சர், 2 பவுண்டரி) எடுத்து அவுட் ஆனார். அதன் பின்னர் ஆசிப்பின் முதல் பந்திலேயே ஜெய்ஸ்வால் 50 ரன் (21 பந்து, 3 சிக்சர், 6 பவுண்டரி) அடித்து அவுட் ஆனார்.

கேப்டன் சஞ்சு சாம்சன் 28 ரன்னில் (24 பந்து, 4 பவுண்டரி) அவுட் ஆனார். எனினும் சிவம்துபே 64 ரன்(42 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி அவுட் ஆகாமல் இருந்தார். பின்னர் வந்த பிலிப்ஸ் 14 ரன் (8 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர் ) எடுத்து, அவுட் ஆகாமல், வெற்றிக்கு தேவையான ஒரு ரன்னை அடித்தார். இறுதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 விக்கெட் மட்டுமே இழந்து 190 ரன் எடுத்து 7 விக்ெகட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Related Stories:

More
>