திமுக வேட்பாளர் ராஜா ராமகிருஷ்ணனுக்கு ஆதரித்து மல்லை சத்யா, எம்எல்ஏ தாயகம் கவி தீவிர பிரசாரம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு 12வது வார்டு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராஜா ராமகிருஷ்ணன், மதுராந்தகம் 13வது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு  போட்டியிடும் பரமானந்தம் ஆகியோரின் தேர்தல் அலுவலகம் திறப்பு விழா தேவத்தூர் கிராமத்தில் நடந்தது. சென்னை திருவிக நகர் திமுக எம்எல்ஏ தாயகம்கவி, மதிமுக துணை பொது செயலாளர் மல்லை சத்யா ஆகியோர் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி, அலுவலகத்தை திறந்து வைத்தனர்.  தொடர்ந்து புலியரணங்கோட்டை ஊராட்சியில் மல்லை சத்யா, எம்எல்ஏ தாயகம் கவி ஆகியோர், திறந்த வேனில் நின்றபடி உதயசூரியன் சின்னத்துக்கு, பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தனர்.

அப்போது, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் ராஜா ராமகிருஷ்ணன், அப்பகுதி மக்களிடையே பேசுகையில், காவாதூர் ஊராட்சியில் உள்ள கம்சலாபுரம் கிராமத்துக்கு குடிநீர் வசதி, மாரிபுத்தூர் கிராமத்துக்கு பஸ் வசதி, தேவா ஊராட்சிக்கு தெரு விளக்கு, குடிநீர் உள்பட அடிப்படை வசதிகளை செய்து தருவேன் என வாக்குறுதியளித்தார்.

அவர்களுடன், ஒன்றிய செயலாளர் ஸ்ரீதர், மதுராந்தகம் முன்னாள் எம்எல்ஏ புகழேந்தி, காஞ்சி தெற்கு மாவட்ட மதிமுக மாவட்ட செயலாளர் வளையாபதி, நிர்வாகிகள் சசிகுமார், ஆர்.சங்கர், ஆர்.செல்வநிதி ராமகிருஷ்ணன், காவாதூர் ஊராட்சி நிர்வாகிகள் ராஜ்குமார், சுப்பிரமணி, ஏழுமலை, ரமேஷ், சந்திரசேகரன், பார்த்திபன், சண்முகம், சக்திவேல், தயாளன், தெய்நாதன், வடிவேல், கார்த்திகேயன், ஜெகன்,  தேவத்தூர் நிர்வாகிகள் சொக்கலிங்கம் ஜெயராமன், குமார், சண்முகம், நாராயணன், புலியரணங்கோட்டை ஊராட்சி நிர்வாகிகள் கருணாநிதி, பூபாலன், பிரவீன்குமார், தட்சணாமூர்த்தி, முரளி உள்பட பலர் இருந்தனர்.

Related Stories:

More
>