×

துணை அதிபராகும் முயற்சிக்கு மக்கள் எதிர்ப்பு பிலிப்பைன்ஸ் அதிபர் அரசியலுக்கு முழுக்கு

மணிலா: பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டேவின் (76) பதவிக் காலம் விரைவில் முடிகிறது. இந்நாட்டின் சட்டப்படி, அதிபரின் பதவிக்காலம் 6 ஆண்டுகள். இப்பதவிக் காலம் முடிந்தால், அதிபராக இருப்பவர் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது. இந்நிலையில், இந்நாட்டில் வரும் 9ம் தேதி துணை அதிபர் தேர்தல் நடக்கிறது. இதில் போட்டியிட்டு, மீண்டும் துணை அதிபராகி அதிகாரத்தில் இருக்கலாம் என்று ரோட்ரிகோ கருதினார். எனவே, இத்தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்தார். இதற்கு ஆளும் கட்சியிலும், எதிர்க்கட்சியிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இது பற்றி மக்களிடம் எடுக்கப்பட்ட கருத்து கணிப்பிலும், ரோட்ரிகோவின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ‘துணை அதிபர் தேர்தலில் அவர் போட்டியிட்டால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படும்,’ என்று எதிர்க்கட்சிகள் எச்சரித்தன. மேலும், ஆளும் கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக போங் கோ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.  இதனால், வேறுவழியின்றி ரோட்ரிகோ நேற்று வெளியிட்ட அறிக்கையில், `பிலிப்பைன்ஸ் மக்களுக்கு நான் அதிபர் பதவிக்கு தகுதி இல்லாதவன் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. பதவியில் தொடர்ந்து நீடிப்பது, மீண்டும் போட்டியிடுவது அரசியலமைப்பை மீறுவதாகும். மக்களின் விருப்பத்துக்கு கீழ்படிந்து, அவர்களின் ஆசையை நிறைவேற்ற, அரசியலில் இருந்து விலகுவதாக அறிவிக்கிறேன்,’ என்று கூறியுள்ளார்.


Tags : Vice President, Initiative, People, President of the Philippines
× RELATED உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நவ.20-ல் தொடக்கம்