×

சிகாகோ ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் முகுருசா

சிகாகோ: அமெரிக்காவில் நடைபெறும் சிகாகோ ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் விளையாட, ஸ்பெயின் வீராங்கனை கார்பினி முகுருசா தகுதி பெற்றார். காலிறுதியில் ஜப்பானின் மெய் ஹோன்டமாவுடன் (200வது ரேங்க்) மோதிய முகுருசா 6-3, 6-2 என்ற நேர் செட்களில் வென்றார். இப்போட்டி 1 மணி, 40 நிமிடத்துக்கு நீடித்தது. மற்றொரு காலிறுதியில் முதல் நிலை வீராங்கனை எலினா ஸ்விடோலினாவுடன் (உக்ரைன்) மோதிய ஆன்ஸ் ஜெபர் (16வது ரேங்க், துனிசியா) 6-4, 6-2 என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
எலனா ரைபாகினா (கஜகஸ்தான்), மார்கெதா வொண்ட்ருசோவா (செக்.) ஆகியோரும் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர்.

Tags : Muguruza ,Chicago Open , Chicago, Open Tennis, Muguruza
× RELATED டபிள்யூடிஏ பைனல்ஸ் டென்னிஸ் தொடர்: அனெட், முகுருசா வெற்றி