×

4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்சை வீழ்த்தியது கேப்பிடல்ஸ்

ஷார்ஜா: மும்பை இந்தியன்ஸ் அணியுடனான ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில், டெல்லி கேப்பிடல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்றது. ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீசியது. கேப்டன் ரோகித், டி காக் இருவரும் மும்பை இன்னிங்சை தொடங்கினர். ரோகித் 7 ரன்னில் வெளியேற, டி காக் 19 ரன் எடுத்து அக்சர் சுழலில் நார்ட்ஜ் வசம் பிடிபட்டார். சூரியகுமார் யாதவ் 33 ரன் (26 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்), சவுரவ் திவாரி 15 ரன் எடுத்து அக்சர் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினர்.

அடுத்து வந்த போலார்டு 6, ஹர்திக் 17, கோல்டர் நைல் 1, ஜெயந்த் யாதவ் 11 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர். மும்பை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 129 ரன் எடுத்தது. க்ருணால் 13, பும்ரா 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். டெல்லி பந்துவீச்சில் அக்சர் படேல், ஆவேஷ் கான் தலா 3, அன்ரிச் நார்ட்ஜ், அஷ்வின் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய டெல்லி அணியின் தவான் 8 ரன், பிரித்வி 6 ரன், ஸ்டீவன் ஸ்மித் 9 ரன்னில் அடுத்தடுத்து வெளியேற, அந்த அணி 4.1 ஓவரில் 30 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறியது. இந்த நிலையில், பொறுப்புடன் விளையாடிய கேப்டன் ரிஷப் பன்ட் 26 ரன் (22 பந்து, 3 பவுண்டரி, 1 சிகசர்) விளாசி வெளியேறினார்.

 ஒரு முனையில் ஷ்ரேயாஸ் அய்யர் போராட... அக்சர் 9, ஹெட்மயர் 15 ரன்னில் ஆட்டமிழந்தனர். டெல்லி 93 ரன்னுக்கு 6 விக்கெட் இழந்ததால் ஆட்டம் விறுவிறுப்பானது. மும்பை வீரர்கள் நம்பிக்கையுடன் தாக்குதலை தீவிரப்படுத்திய நிலையில், ஷ்ரேயாஸ் - அஷ்வின் ஜோடி பதற்றமின்றி விளையாடி ரன் சேர்க்க, டெல்லி அணி 19.1 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 132 ரன் எடுத்து வென்றது. ஷ்ரேயாஸ் 33 ரன் (33 பந்து, 2 பவுண்டரி), அஷ்வின் 20 ரன்னுடன் (21 பந்து, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். மும்பை பந்துவீச்சில் போல்ட், ஜெயந்த், க்ருணால், பும்ரா, கோல்டர் நைல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். அக்சர் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.


Tags : Capitals ,Mumbai Indians , Wicket, Mumbai Indians, Capitals, IPL
× RELATED 29 ரன் வித்தியாசத்தில் டெல்லியை...