×

பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் ராகுல், பிரியங்காவுக்கு ஆதரவாக இருப்பேன்: சித்து தகவல்

சண்டிகர்: பஞ்சாப் மாநில புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள சரண்ஜித் சிங் சன்னி, டிஜிபி உள்பட சில முக்கிய அதிகாரிகளை சித்துவுடன் கலந்தாலோசிக்காமல் நியமித்தார். இதனால் அதிருப்தி அடைந்த சித்து, தனது மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் பஞ்சாப் மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், மகாத்மா காந்தி, லால்பகதூர் சாஸ்திரி பிறந்த நாளையொட்டி நவ்ஜோத் சிங் சித்து டிவிட்டரில் கூறியிருப்பதாவது:

காந்தி மற்றும் சாஸ்திரியின் கொள்கைகளை கடைப்பிடிக்க வேண்டும். பதவி இருந்தாலும், இல்லாவிட்டாலும் ராகுல், பிரியங்காவுக்கு ஆதரவாக செயல்படுவேன். சில எதிர்சக்திகள் என்னை தோற்கடிக்க பார்க்கிறது. ஆனால், எனது ஒவ்வொரு துளி நேர்மறை ஆற்றலும் பஞ்சாப்பை வெற்றியடைய செய்யும். ஒவ்வொரு பஞ்சாபியும் வெற்றி பெறுவார்’ இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Rahul ,Priyanga , Position, Rahul, Priyanka, Sidhu
× RELATED யாரும் ஓட்டு போட கூடாது; ராகுல்...