×

பெண் முன்னேற்றம் என்பதில் இருந்து பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கு மாற வேண்டும்: ஜனாதிபதி ராம்நாத் உரை

புதுடெல்லி: சட்ட சேவைகள் ஆணையத்தின் பான் இந்தியா சட்ட விழிப்புணர்வு மற்றும் பரப்புரை பிரசாரம் டெல்லியில் நேற்று தொடங்கியது. 6 வார காலம் நடைபெறும் இதனை தொடங்கி வைத்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசியதாவது: சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினருக்காக பணியாற்ற, சிறப்பான முயற்சிகளை சட்ட சேவைகள் ஆணையம் மேற்கொள்ள வேண்டும். இதற்காக மூத்த வழக்கறிஞர்கள் தங்கள் நேரத்தின் ஒருபகுதியை ஒதுக்க வேண்டும்.

பெண்களின் முன்னேற்றம் என்ற நிலையில் இருந்து, பெண்கள் தலைமையிலான வளர்ச்சி என்ற நிலையை நோக்கி நாட்டின் கொள்கை மாற்ற வேண்டும். நீதிமன்றங்கள் உள்ளிட்ட சட்ட சேவைகள் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களின் எண்ணிக்கையை உயர்த்த முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.  அப்போது தான் அதிகளவிலான பெண்கள் பயனடைய முடியும். இதன் மூலம் மட்டுமே அது சாத்தியமாகும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : President ,Ramnath , Female Advancement, Leadership, Development, President, Ramnath
× RELATED இந்தியாவின் எதிர்காலத்தை...