டாஸ்மாக்கிற்கு எதிராக வழக்கு கலெக்டர் விசாரிக்க ரூ.10 ஆயிரம் டெபாசிட் செய்ய உத்தரவு

மதுரை: புதுக்கோட்டை மாவட்டம், பட்டத்திக்காடு அரசு மருத்துவமனை அருகே டாஸ்மாக் மதுபான கடை திறப்பதாக கூறி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்யப்பட்டது.  இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி எம்.துரைச்சுவாமி ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:

மனுதாரர் தனது கோரிக்கை குறித்து கலெக்டரிடம் முறையிட வேண்டும். இதன்படி கலெக்டர் விசாரித்து வழிகாட்டுதல்கள் மீறப்படவில்லை என்பது தெரிந்தால் செயல்பட அனுமதிக்கலாம். முன்னதாக மனுதாரர், கலெக்டரிடம் ரூ.10 ஆயிரத்தை டெபாசிட் செய்ய வேண்டும். இதன்பிறகே கலெக்டர் விசாரிக்க வேண்டும். அதில், வழிகாட்டுதல்கள் மீறப்படவில்லை என்பது தெரியவந்தால் டெபாசிட் பணத்தை அரசு கருவூலத்தில் செலுத்த வேண்டும்.  இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories:

More
>