காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் சத்தியமூர்த்தி பவனில் கருத்தரங்கம்

சென்னை: மகாத்மா காந்தி பிறந்தநாள், காமராஜர் நினைவு நாள், முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி பிறந்தநாளையொட்டி சென்னை சத்திய மூர்த்தி பவனில் நேற்று அவர்களது திருவுருவப் படங்களுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, விஜய் வசந்த் எம்பி, அசன் மவுலானா எம்.எல்.ஏ., ஆ.கோபண்ணா, உ.பலராமன், டி.என்.முருகானந்தம், பொன். கிருஷ்ணமூர்த்தி, செந்தமிழ் அரசு, ஆர்.தாமோதரன், கீழானூர் ராஜேந்திரன், கே.சிரஞ்சீவி, அணுகுண்டு ஆறுமுகம், மாவட்ட தலைவர்கள்  எம்.எஸ்.திரவியம், எம்.பி.ரஞ்சன் குமார், சிவராஜசேகரன் மற்றும்  திருவான்மியூர் மனோகரன், வில்லியம்ஸ் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள்  கலந்து கொண்டனர்.

தொடர்ந்து கே.எஸ்.அழகிரி தலைமையில் கருத்தரங்கம் நடந்தது. காலம் காட்டிய கருணை என்ற தலைப்பில் வழக்கறிஞர் ராமலிங்கம் சிறப்புரையாற்றினார். முன்னதாக கே.எஸ்.அழகிரி தலைமையில் காமராஜர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள காந்தியடிகள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Related Stories: