வன உயிரினங்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு மாரத்தான்

சென்னை: சென்னை, பெசன்ட் நகர் கடற்கரையில் நேற்று  வனத்துறை சார்பில் நடந்த வன உயிரின வாரவிழாவின் முதல்நாளில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் ஓட்டத்தை வனத்துறை முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் அசோக் உப்ரேதி கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர், வனத்துறை முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் அசோக் உப்ரேதி கூறுகையில், ‘‘வனத்துறை மேற்கொள்ளும் வனப்பரப்பை அதிகப்படுத்துதல் மற்றும் வன விலங்குகளை பாதுகாக்கும் பணியில் பொதுமக்களும் பங்கேற்க வேண்டும்’’ என்றார்.

 வன உயிரினங்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தில் 65 பேர் பங்கேற்றனர். ஓட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் மற்றும் டி-சர்ட் வழங்கப்பட்டது.

Related Stories:

More
>